சேந்தமங்கலம், மார்ச் 6: சேந்தமங்கலம் அருகே வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சேந்தமங்கலம் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி, சிவியாம்பாளையம் ஆகிய பகுதியில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ தமிழ்குமரன் தலைமையில் போலீசார், அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் மதுபாட்டுகளை மொத்தமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு 24மணி நேரமும் விற்பனை செய்த ரேவதி(50), சிவியாம்பாளையத்தை சேர்ந்த ராமர் (45) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது
0
previous post