கெங்கவல்லி, ஜூன் 16: வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீ.ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(55). இவரது மனைவி சுகந்தி(52). இருவரும் தங்களது வீட்டில் வைத்து சந்துக்கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. வீடியோ வைரலானதால் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், வீரகனூர் போலீசார் செல்வத்தின் வீட்டுக்கு சென்று, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, செல்வம் மற்றும் அவரது மனைவி சுகந்தியை கைது செய்தனர்.
சந்துக்கடையில் மது விற்ற தம்பதி கைது
0
previous post