கொள்ளிடம், செப்.1:கொள்ளிடம் அருகே சந்தபடுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டத்தில் தலைவர் உள்ளிட்ட 24 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் சாருபாலா தலைமை வகித்தார். பூபதி,பன்னீர்,மணி மாரியப்பன் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதிய பள்ளி மேலாண்மை குழு தலைவராக ரஞ்சிதம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 23 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.