கும்பகோணம், ஜூலை 6: கும்பகோணம் அருகே பாபநாசம் சந்தன காளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள சந்தன காளியம்மன், கருப்பு, மதுரை வீரன், பேச்சியம்மன் ஆலயத்தில் முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் பாபநாசம் இரட்டை பிள்ளையார் கோயில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தனர்.