கீழ்வேளூர், மே 26: கீழ்வேளூரை அடுத்த புதுச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் சந்தனக்காப்பு திருவிழா முன்னிட்டு சிவன் கோவில் குளத்தில் இருந்து பால் குடம், காவடி எடுத்து கொண்டு 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.