சிவகங்கை, ஜூலை 7: சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் பூப்பாண்டியம்மாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் செல்வராணி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
அடுத்தகட்ட போரா ட்டமாக, மாவட்ட நிர்வாகத்திடம் பெருந்திரள் முறையீடு அளிக்கும் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட நிதிக்காப்பாளர் நடராஜன் மற்றும் மாநில செயலாளர் பாண்டி, நவநீதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றியப் பொருளாளர் பிரபா நன்றி கூறினார்.