திண்டுக்கல், ஆக. 7: திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி, சாலாட்சி, பெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். முன்னாள் மாநில துணை தலைவர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ஈம கிரிகை நிதி ரூ.25,000 வழங்க வேண்டும். ஸ்டார் கெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஒய்வூதியர்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் குமரம்மாள் நன்றி கூறினார்.