Friday, February 23, 2024
Home » சத்துணவுக்கு காய்கறி வழங்கிய மாணவர்கள்

சத்துணவுக்கு காய்கறி வழங்கிய மாணவர்கள்

by Karthik Yash

மல்லசமுத்திரம் ஜன.9: மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயப்பிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலத்தில் இருந்து, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோட்டம் அமைக்க, மா, கொய்யா, நெல்லி எலுமிச்சை, பப்பாளி, வாழை, தென்னை போன்ற மரச்செடிகள், உயர்ரக காய்கறி விதைகள், பல்வேறு மூலிகை செடிகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மண்புழு உரம், தொழு உரம் போன்ற இயற்கை உரங்களும் வழங்கப்பட்டது. மேலும், பராமரிப்பு பணிக்காக மண்வெட்டி, கொத்து, பூவாளி, கார்டன் ரேக், சிக்கேசர் போன்ற உபகரணங்களும் மானியத்தில் 3 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு, தோட்டம் அமைத்து தரப்பட்டது.

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக 40க்கும் மேற்பட்ட பசுமைப்படை சார்ந்த மாணவர்களும், தோட்டத்தை தினந்தோறும் பராமரித்து, தற்ேபாது செழித்து வளர்ந்த செடிகளில் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை, பள்ளியின் சத்துணவு மையத்திற்கு வழங்கியுள்ளனர். மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், அவ்வப்போது பள்ளிக்கு சென்று தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

You may also like

Leave a Comment

seven + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi