பரமக்குடி: சத்திரக்குடி வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 20 ஹெக்டேர் பரப்பில் ரசாயன பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்த்து, இயற்கை முறையில் சாகுபடி செய்யும் 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.12,000 மானியம் வழங்கி செயல் விளக்கத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. போகலூர்,பூவிளத்தூர், டி.கருங்குளம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் குதிரைவாலி,வரகு, நெல் பயிர்களில் செயல் விளக்கத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. போகலூரில் முருகேசன் வயலில் இயற்கை சாகுபடி முறையில் 2.5 ஏக்கர் பரப்பில் குதிரைவாலி சாகுபடி செய்த செயல் விளக்கத்திடலினை வேளாண்மை துணை இயக்குநர் பாஸ்கர மணியன் ஆய்வு செய்தார். பின்னர் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம் மற்றும் வேப்பங்கொட்டை 5 சதம் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தி அதிகமாக மகசூல் எடுக்க ஆலோசனை வழங்கினார்.