திருப்புவனம், ஜூன் 26: திருப்புவனத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட உரிமையியல் மன்ற நீதிபதி வெங்கடேஷ்பிரசாத் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் கடத்தல் பிரிவு தலைமை காவலர் ராஜேஸ்வரி, முதல் நிலைக்காவலர்கள் சாரதா, ராதிகா, சமூக நலத்துறை அலுவலர் ஜூலி ஆகியோர் பேசினர். இதில், ஒவ்வொரு கிராமத்திலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமுதாய சீரழிவுக்கு முக்கிய காரணமே போதை கலாச்சரம். இதுகுறித்து மக்களிடம் நேரடியான தொடர்பில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒவ்வொரு கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். என ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.