பழநி, ஜூன் 25: தென்னிந்தியாவில் திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் ஒன்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வட்டமாக பழநி விளங்குகிறது. தமிழகத்தில் கல்வியாளர்கள் நிரம்பிய பகுதியாகவும் பழநி விளங்குகிறது.
பழநியில் ஒரு சட்ட கல்லூரி துவக்கினால் இந்நகரை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சட்டக்கல்வி பெறுவது எளிதாக இருக்கும். எனவே, பழநியின் தொன்மையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பழநியில் ஒரு சட்ட கல்லூரி அமைக்க பரிசீலனை செய்ய வேண்டுமென ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.