ஈரோடு, நவ.11: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மலையம்பாளையம், அறச்சலூர், நம்பியூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த சோளங்காபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (20), அறச்சலூர் வடபழனி குமரன் நகரை சேர்ந்த சுரேஷ் (44), நம்பியூரை அடுத்துள்ள அரேபாளையம் வடக்கு வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 23 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.