ஈரோடு, ஆக. 20: ஈரோடு குமலன்குட்டை டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தியதில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு கோட்டை, முனியப்பன்கோவில் வீதியை சேர்ந்த கணேசன் (42) என்பவரை கைது செய்தனர்.
பவானி போலீசார் நடத்திய ரெய்டில் நல்லிபாளையம், மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த சதீஸ் (43) என்பவரை கைது செய்தனர். இதே போல மாவட்டத்தில் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட ரெய்டில் கோபி பழனிகவுண்டம்பாளையம், சர்ச் வீதியை சேர்ந்த நித்யானந்த் (24), ஈரோடு அன்னை சத்யாநகர் மூர்த்தி (46), பெருந்துறை சீனாபுரம் சுரேஸ் (38), கரூர் மாவட்டம் அருள்முருகன் (27) உள்ளிட்ட உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.