காஞ்சிபுரம், ஆக.17: காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் செயல்படும் சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் முதுகலை பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக, கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்கள், முதன்முதலில் கல்லூரிக்கு வருகை புதிய மாணவர்களுக்கு மலர் கொத்தும், இனிப்பும் வழங்கி வரவேற்றனர். மாணவர்கள் சேர்க்கை குழு தலைவர் பேராசிரியர் வெங்கட்ரமணன் வரவேற்று பேசினார். துணை வேந்தர் சீனிவாசு தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் செல்லா சாஸ்திரி, பதிவாளர் ராம், மாணவர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பல்துறை சார்ந்த துறை தலைவர்கள், கலாச்சார குழுவின் தலைவர் ஆகியோர் மாணவ – மாணவிகளை வாழ்த்தி பேசினர். முனைவர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.