சங்கராபுரம், ஜூன் 17: சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பூசாரி கோவிந்தசாமி என்பவர் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கோயிலின் கதவு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க காசு மற்றும் உண்டியலில் இருந்த சுமார் ரூ.3,500 ரொக்கப்பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவிந்தசாமி, மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு
0