சிவகாசி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு சிவகாசியில் பல்வேறு கட்சிகள் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகாசி மாநகர பல்வேறு கட்சிகள் சார்பாக மவுன அஞ்சலி ஊர்வலம் நேற்று மாலை 5 மணி அளவில் சிவகாசி காமராஜர் சிலையில் இருந்து சிவன் கோவில் முன்பு வரை நடைபெற்றது. திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் திமுக சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிக்கண்ணன், மாநகர பகுதி கழக செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவா, பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா, சமுத்திரம், பாஜ மாநகர தலைவர் பாட்டாகுளம் பழனிச்சாமி, தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், மதிமுக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மதிமுக மாநகர கவுன்சிலர் ராஜேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செல்வின் யேசுதாஸ், பைக்பாண்டி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.