சங்கரன்கோவில்,ஆக.24: சங்கரநாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை இம்பிரின்டா நிறுவனம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை காண வந்த பக்தர்களுக்கு மதுரை இம்பிரின்டா நிறுவனம் சார்பில் மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை வரை நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் ஏரளாமானோர் உணவருந்தினர். ஏற்பாடுகளை இம்பிரின்டா நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.