சங்கரன்கோவில், ஆக. 23: சங்கரன்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் வடக்கு ரத வீதியில் வைத்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் இன்று மாலை 7 மணிக்கு சங்கரன்கோவில் நகரைச் சேர்ந்த சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு விருது வழங்கும் விழா, தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், திரைப்பட பாடகர்கள் மாலதி மற்றும் நெல்லை பிரபாகரன் கலந்து கொள்ளும் ஜேஆர்எஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது. சங்கரன்கோவிலில் சாதனை புரிந்த மண்ணின் மைந்தர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ராஜா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.