சங்கரன்கோவில்,ஆக.29: சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மோகன் மகன் மாரிசுதன் (15), சண்முகசுந்தரம் மகன் செம்மொழிச் செல்வன்(15). இவர்கள் நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிச்செல்லும்போது பள்ளி அருகே உள்ள மூன்று வழிச்சாலை சிக்னல் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக லாரி பள்ளி மாணவர்கள் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவர்கள் இருவரது கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மாணவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மாணவர் மாரிசுதன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவிலில் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர்கள் 2பேர் படுகாயம்
previous post