சங்கரன்கோவில்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஹோமியோபதி மருந்தாளுனர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வேல்ராஜன், மருந்தாளுனர் முருகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மருத்துவத்துறை அனைத்து பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.