சாத்தான்குளம், மே 25:சங்கரன்குடியிருப்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கலையரங்கத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட சங்கரன்குடியிருப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னாள் யூனியன் சேர்மன் ஜெயபதி, சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளர் ராஜா ஆறுமுகநயினார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் வரவேற்றார். தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி, பிரபு, ஜெயசீலன, கோதண்டராமன், ரமேஷ்பிரபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான்ராஜா, வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவா, வேலாயுதபுரம் பள்ளி ஆசிரியர் செல்வராஜ், சங்கரன்குடியிருப்பு கோயில் தர்மகர்த்தா மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல்முருகன் நன்றி கூறினார்.