சாத்தான்குளம், அக். 27: சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட சங்கரன்குடியிருப்பில் நெடுங்குளம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். புதுக்குளம் பஞ். தலைவர் பாலமேனன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு தற்காலிக மலட்டு தன்மை நீக்குதல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்குதல் செய்தல், சினை பரிசோதனை, கருவூட்டல் செய்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் விவசாயிகள், கால்நடை பராமரிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.