சேலம், ஆக.4: சேலம் மாசிநாயக்கன்பட்டி அன்னை தெருவை சேர்ந்தவர் கல்பனா(40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் சங்ககிரி நீதிமன்றத்தில் கிளார்க்காக வேலை செய்து வருகிறார். கடந்த 31ம்தேதி, புதிய பஸ் ஸ்டாண்ட் சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரது மகன் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட அவர், கோயிலுக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்ககிரி நீதிமன்ற ஊழியர் மாயம்
previous post