தர்மபுரி, ஆக.31: தர்மபுரி அருகே, அமானி ரெட்டிஅள்ளி கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயில் மண்டல பூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி சக்தி மாரியம்மன் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள செல்வவிநாயகர், வரதராஜ பெருமாள், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகம் மற்றும் பரிவாரங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சக்தி மாரியம்மனுக்கு உபகார பூஜைகளும், சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மண்டல பூஜையையொட்டி, பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
சக்தி மாரியம்மன் கோயில் மண்டல பூஜை
previous post