பிறகு, வெல்லக் கரைசலை கொதிக்கவைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும். அதனுடன் எல்லா ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரையை தூவலாம்.
சக்கரா உப்பேரி
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலரவிடவும். வாணலியில் எண்ணையை காயவிட்டு வாழைக்காய் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும். வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.