கோவை, ஜூன் 25: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக ரத்த தானம் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமை வேளாண் பல்கலை.யின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் துவக்கி வைத்தார். இஎஸ்ஐ மருத்துவமனையின் ரத்த வங்கி தலைமை மருத்துவர் டாக்டர் உமாசரோஜினி தனது குழுவினருடன் முகாமை நடத்தினார்.
இதில், பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) வெங்கடேச பழனிச்சாமி, மாணவர் நலத்துறை முதன்மையர் மரகதம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பல்கலைக்கழக மாணவ, மாணவியர், கொடையாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 155 பேர் ரத்த தானம் செய்தனர்.