கோவை, ஆக. 31: கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட பகுதிகளில் குற்ற வழக்குகள் விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி தீர்வு காண போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூறினார். மேலும் இந்த கூட்டத்தில் வர இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை சரக டிஐஜி சரவணசுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எஸ்பி-க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று கோவை பிஆர்எஸ் வளாகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாம், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொள்ள உள்ளார்.