கோவை, ஆக. 19: நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாட்டு சிறைகளில் 66 சதவீதம் தண்டனையை நன்னடத்தையுடன் அனுபவித்த அடிப்படையில் 19 கைதிகள் விடுதலை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் தூக்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
இவர்களின் நன்னடத்தை அடிப்படையில் தண்டணை காலத்திற்கு முன்பே சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது விடுதலை செய்யப்படுவர். அதன்படி, 77-வது சுதந்திர தினத்தையொட்டி கோவை சிறையில் உள்ள 7 ஆண் கைதிகள், ஒரு பெண் கைதி என மொத்தம் 8 பேரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 8 பேரும் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.