கோவை, ஆக.23: கோவை மாவட்ட போலீசில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் மாதையன், அழகுராஜ் ஆகியோர் அண்ணா பதக்கம் பெற தேர்வு பெற்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் மாதையன் சூலூரில் பணியாற்றுகிறார். பல்வேறு வழக்குகளில் இவர் திறம்பட செயல்பட்டதற்காக பதக்கம் பெற தேர்வாகியுள்ளார்.
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் அழகுராஜ் சிறப்பான பணிக்காக அண்ணா பதக்கம் பெற தேர்வு பெற்றார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கருப்புசாமி பாண்டியன் (செட்டிபாளையம்), குப்புராஜ் (பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு), திலக் (தடாகம்), அப்சல் அகமது (சைபர் பிரிவு), ராதாகிருஷ்ணன் (கருமத்தம்பட்டி) ஆகியோருக்கு சென்னையில் இன்று அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.