கோவை, மே 28: கோவை அருகே தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் 18 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த இருகூர் மகாகவி நகரை சேர்ந்தவர் கபிலன் (29). தனியார் நிறுவன உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் குடும்பத்துடன் அருகே உள்ள சர்ச்சுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த உடைமைகள் சிதறி கிடந்தன.
அதில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கபிலன் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகை கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.