கோவை, ஆக. 7: கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 21 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில், நடப்பாண்டில் 557 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை கல்லூரியில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.60 ஆகும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு கட்டணமில்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், உதவி மையங்களில், \\”The Director, Directorate of collegiate Education, Chennai\\” -15 என்ற பெயரில் வங்கி வரவோலை மூலம் அல்லது நேரடியாக செலுத்தலாம். இந்த முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.