Wednesday, February 28, 2024
Home » கோவையில் குழந்தை தொழிலாளர் ஒருவர் மீட்பு

கோவையில் குழந்தை தொழிலாளர் ஒருவர் மீட்பு

by Ranjith

 

கோவை, பிப்.2: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், நகை உற்பத்தி செய்யும் இடங்கள், கோழிப்பண்ணைகள் மற்றும் தோல் பைகள் தயாரிக்கும் இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளர் கண்டறியும் வகையில் வருவாய் துறை அலுவலர், தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், காவல் துறை மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் அடங்கிய குழுக்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது முரண்பாடுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. கொத்தடிமை தொழிலாளர் பணிக்கமர்த்தவது சட்டபடி தண்டனைக்குரிய குற்றமாகும். பணிக்கு அமர்த்தினால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் எந்த ஒரு நிறுவனங்களிலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த வித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது.

15 முதல் 18 வயதிற்குட்டபட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு வளரிளம் பருவத்தினரை அபாயகரமற்ற வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றி பணிக்கமர்த்தப்பட வேண்டும். இந்நிலையில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், கடந்த மாதத்தில் ஒண்டிப்புதூர், பீளமேடு மற்றும் கிராஸ்கட் ரோடு பகுதிகளில் மாவட்ட தடுப்பு குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளும்போது ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கடையில் ஒரு வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 14 வயது நிறைவடையாத குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்திய ஒரு நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

You may also like

Leave a Comment

17 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi