கோவில்பட்டி, மே 17: கோவில்பட்டி கரிதா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் கரிதா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான கபடி பயிற்சி முகாம் நடந்தது. சுமார் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். ஓட்டப்பயிற்சி, கபடி பயிற்சி வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக இரு குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பரமசிவம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளி தாளாளர் காசிராஜன், பள்ளி முதல்வர் லில்லி ஜோஅன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவில்பட்டி பள்ளியில் மாநில கபடி பயிற்சி முகாம்
85