கோவில்பட்டி, மே 20: கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி இறந்தார்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராமசாமி (43). இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இங்குள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த ராமசாமி, அதன் பிறகு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் ராமசாமி இறந்தார். நேற்று காலை 11 மணியளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி
76