கோவில்பட்டி, ஜூன் 8: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 5ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இப்போட்டியை அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் துவக்கி வைத்தார். தொடர்ந்து வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வரவேற்றார். நடுவர்களாக மூர்த்தி, அஸ்வின், அஜித் ஆகியோர் செயல்பட்டனர்.முதல் போட்டியில் திட்டங்குளம் லெவன்ஸ் அணியும், ஏ.எம்.சி கூசாலிபட்டி அணியும் மோதின. இதில் 3:2 என்ற கோல் கணக்கில் ஏ.எம்.சி கூசாலிபட்டி அணி வெற்றி பெற்றது. நிகழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் மாரியப்பன் செய்திருந்தார்.
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி
63
previous post