கோவில்பட்டி, அக். 19: கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கி 50ம் ஆண்டு நிறைவையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த விழாவிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறைவிட மருத்துவர் சுதா முன்னிலை வகித்தார். சித்த மருத்துவ பிரிவு டாக்டர் அபிநயா வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப் போட்டிகளும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சமையல் போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி கலந்து கொண்டு சித்த மருத்துவ விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு பேசினார். பணி நிறைவுபெற்ற மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள் திருமுருகன், ஜான்மோசஸ், சேவியர், தமிழமுதன், பீனா, விஜயலதா, மகேஸ்வரி, முருக பொற்செல்வி, கார்த்திகா, அனுஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். மருந்தாளுனர் முத்துலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சித்த மருத்துவர் அபிநயா செய்திருந்தார்.