கோவில்பட்டி, ஜூன் 14: கோவில்பட்டியில் வரும் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவல் கோவில்பட்டி கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவில்பட்டியில் வரும் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
0
previous post