கோவில்பட்டி, ஆக. 13: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவில் பூவலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டில் அவருடைய சகோதரி மாரியம்மாள், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழையினால் பூவலிங்கம் வீடு முழுவதுமாக பொதும்பி இருந்தது. இந்நிலையில் மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வழக்கம்போல் இரவு தூங்கினர். நேற்று அதிகாலை வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். வீட்டின் முன்பகுதி, சமையல் அறை உள்ளிட்டவை முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமடைந்தன. சுவர் இடிந்து விழும் சத்தம் கேட்டு உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவில்பட்டியில் பலத்த மழை வீடு இடிந்து சேதம்
previous post