கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. மாநில கேப்டன் மன்ற துணைச்செயலாளர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், கோவில்பட்டி தொகுதி செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர். இதில் 2026ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பூத்கமிட்டியை ஆய்வு செய்து தொகுதி வாரியாக செயல்வீரர் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கை காட்டும் வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன் மலைராஜ், கோவில்பட்டி நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன் கயத்தார் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அருண், பேரூர் செயலாளர்கள் கண்ணன், செல்லப்பாண்டி, கேப்டன் மன்ற மாவட்டச்செயலாளர் முத்துமாலை, துணைச்செயலாளர் குவாலிஷ்ராஜ் அந்தோனி, மகளிர் அணி மாவட்டச் செயலாளர் வெண்ணிலா, தொழிற்சங்க மாவட்டச்செயலாளர் சுப்புராஜ், துணைச்செயலாளர் முருகன், இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலாளர் லட்சுமணன், பொறியாளர் அணி மாவட்ட துணைச்செயலாளர் கிரிதரன் மதிமுத்து கலந்துகொண்டனர்.
கோவில்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
0
previous post