கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அனைத்திந்திய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான காஞ்சி பன்னீர் செல்வம் சிறப்புரை ஆற்றினார். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனத்தை துரிதப்படுத்துவதோடு பூத் கமிட்டி பட்டியலை வரும் நவ. 3ம் தேதிக்குள் ஒன்றியச் செயலாளர்கள் அளிக்க வேண்டும் என கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.