விழுப்புரம், அக். 18: விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி தேவி(32). இவர்களுக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்து 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பழனி வெளியூரில் தங்கி கோழிகுஞ்சு வியாபாரம் செய்து வந்தாராம். அதில் கிடைக்கும் பணத்தை மனைவி தேவியின் வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் இருந்த பணத்தை தேவி எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பழனி கணக்கு கேட்டபோது செலவு செய்ததை கூறியதால் ஆத்திரமடைந்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் தொடர்ந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.