*பண்ணையாளர்கள் எதிர்பார்ப்புபல்லடம் : தமிழ்நாட்டில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கான தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவை அரசு அதிகரிக்க வேண்டும் என்று கோழிப்பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர் .பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி விற்பனையை பொறுத்து கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி விலை நிர்ணயம் செய்து அறிவிகின்றனர்.கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான முக்கிய தீவனமான மக்காச்சோளம் தமிழ்நாட்டில் போதிய அளவு சாகுபடி செய்யப்படாததால் வெளிமாநிலங்களில் இருந்து கூடுதல் செலவு செய்து வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. அதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு நல்ல வருமாணம் கிடைத்திடும் வகையில் தமிழ்நாட்டில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதுபல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது: கோழித் தீவனத்திற்கு மூலப்பொருளான மக்காச் சோளம் விலை உயர்த்து வருகிறது. கடந்த மாதத்தில் மூட்டை ரூ 2 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் தற்போது மூட்டை ரூ.2 ஆயிரத்து700 ஆக விற்பனையாகிறது. விளைச்சல் குறைவானதால் வெளிமாநிலங்களில் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம். இதனால் விலையும் அதிகம் போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. எனவே தமிழ்நாட்டில் மக்காச்சோளம் உற்பத்தியைஅதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சோயா புண்ணாக்கு கடந்த 6 மாதத்திறகு முன்பு 1 கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ.90 ஆக விலை உயர்ந்துள்ளது. சோயா புண்ணாக்கு மக்காச்சோளம் போன்றவை வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. எனவே ரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழிதீவனப்பொருட்களுக்கு மத்திய அரசு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கவேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்கவேண்டும். என்றார்.பல்லடம் பனப்பாளையம் விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: பல்லடம் வட்டார பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிரில் நோய் தாக்குதல் குறைவு, பராமரிப்பு செலவு குறைவு என்பதால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.என்றாலும் மக்காச்சோளத்தின் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில் போதுமான விலை கிடைப்பதில்லை. எனவே மக்காச்சோளத்துக்கான உற்பத்திச் செலவை கணக்கிட்டு நெல், கரும்பு போல் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் உற்பத்தி செலவு கணக்கிடும் குழுவில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடம் பெற வேண்டும்.மேலும் மக்காசோளத்தில் நோய் தாக்குதல் அதிகரித்துனை நிலையில் பயிர் பாதுகாப்புக்கென அதிகம் செலவு செய்ய வேண்டியதுள்ளது.எனவே பயிர் பாதுகாப்புக்கான மருந்துகளை அரசு இலவசமாகவோ மானிய விலையில் வழங்க வேண்டும்.விதைகளால் மகசூல் இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் மயில்கள், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போதைய நிலையில் கால்நடைகளுக்கான தீவனத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே மக்காச்சோளம் சாகுபடி செய்யும் நிலை உள்ளது.அறுவடையின் போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.மக்காச்சோள சாகுபடியில் உழவு, மருந்து. உரம் என பல மடங்கு செலவு அதிகரித்துள்ளது ஆனால் விற்பனை விலை உயர்வு இல்லை குறைந்த பட்ச ஆதார விலையாக 100 கிலோ மூட்டைக்கு ரூ4 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் 100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே மக்காச்சோள அறுவடைக்கென நவீன எந்திரங்களை அரசு கொண்டு வரவேண்டும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.விதைப்பு செய்த 120 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். இந்த நிலையில் கடந்த கார்த்திகை பட்டத்தில் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகம் இல்லை. இதனால் மக்காச் சோள உற்பத்தி பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. ஆனால், இடுபொருட்கள், உரம், மருந்து, ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே சமயம் மக்காச்சோனத்திற்கு உரிய விலை இல்லை. மக்காச்சோளம் ஒரு குவிண்டால் தற்போது ரூ.2ஆயிரம் வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது ரூ.2 ஆயிரத்து 500க்கு கொள்முதல் செய்தால், ஓரளவுக்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மேலும் மக்காச்சோள பயிர்களில் இருந்து எத்தனால் போன்ற பொருட்களை தயாரிக்க அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் மக்காச்சோள சாகுபடியின் மூலம் விவசாயிகள்நல்ல வருமானம் பெற முடியும். இப்பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு கண்டு மக்காச்சோள சாகுபடிப் பரப்பை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்….