திருச்சி, செப். 20: திருச்சி கோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்கம் சார்பில் நடைபெறவிருந்த அண்ணா பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு தடைவிதித்து முதன்மை மாவட்ட நீதிபதி பாபு உத்தரவிட்டார். திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் நேற்று பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் விழா சங்க அலுவலகத்தில் நடத்த ஒருதரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மற்றொரு தரப்பை சேர்ந்த வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அனுமதி கேட்டு ஒருதரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் மாவட்ட முதன்மை நீதிபதி பாபுவிடம் கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி கோர்ட் வளாகத்துக்குள் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் விழா நடத்தக்கூடாது எனக்கூறி நீதிபதி பாபு, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டார்.