பள்ளிபாளையம், மே 29: பள்ளிபாளையம் அடுத்துள்ள சோழசிராமணியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மளிகை கடையில், கடந்த 2022-ல் பள்ளிபாளையம் சின்னவீதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர், உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி சோதனை செய்து, அங்கிருந்த 7 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், பின்னர் ஜாமீனில் வெளி வந்தார்.
கடந்த 2025ம் ஆண்டு முதல் மணிகண்டன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக திரிந்து வந்துள்ளார். இதனால் இவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இவர் மீது 20 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் நடந்து வந்த மணிகண்டனை, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பிடித்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.