ஈரோடு, ஆக.5: ஈரோடு மாநகராட்சி 3ம் மண்டல அலுவலக பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து நேற்று பணியாற்றினர். அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். எல்லை விரிவாக்க பணியாளர்கள் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
அலுவலக நேரத்தில் மட்டும் ஆய்வுக் கூட்டங்களை நடத்திட வேண்டும். பிற துறை பணிகளை நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் செய்ய வலியுறுத்த கூடாது. அரசாணை எண் 152 அரசாணை எண் 10-ல் விடுபட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து நேற்று ஈரோடு மாநகராட்சி மெயின் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் ஊழியர்கள் பணியாற்றினர்.