மதுரை, ஆக. 24: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியத்தை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவள்ளுவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாநில துணை தலைவர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் நாகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
previous post