பந்தலூர்,ஆக.31: பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி கோரஞ்சால் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இறந்தவர்களை புதைப்பதற்கு பயன்படுத்தி வரும் பொது மயானம், முட்புதர்கள் சூழ்ந்து காடு போல காணப்படுகிறது.
யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் பொது மயானம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றது. எனவே சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்து முட்புதர்களை அகற்றி மயானத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.