வேலூர், ஜூலை 10: வேலூர் சலவன்பேட்டையில் அம்மன் கோயில் திருவிழா வசூல் தகராறில் ஒருவருக்கு காது அறுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்ைட சாலையில் சக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்ேகாயிலில் ஆடி வெள்ளித்திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் அப்பகுதி விழாக்குழுவினர், பொதுமக்கள் சார்பில் ேநற்று முன்தினம் மாலை நடந்தது. அப்போது அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் பங்களிப்பாக எவ்வளவு நிர்ணயிப்பது என்பது தொடர்பான விவாதம் நடந்தது.
அப்போது அம்மணாங்குட்டை சாலையை சேர்ந்த பாஸ்(எ)பாஸ்கரன்(37) என்பவர், இந்த ஆண்டு பங்களிப்பு தொகையை அதிகமாக நிர்ணயித்தால் விழாவை சிறப்பாக நடத்தலாம் என்று கருத்து தெரிவித்தாராம். அதற்கு கூட்டத்தில் இருந்த அதே பகுதியை சேர்ந்த சிவபாலன்(27), இதுபற்றி நீ எப்படி ஆலோசனை கூறலாம்? என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சிவபாலன், அங்கு கீழே கிடந்த இரும்பு தகடு துண்டை எடுத்து பாஸ்கரன் தலையில் தாக்கினாராம். இந்த தாக்குதலில் பாஸ்கரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதோடு அவரது காதும் அறுந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தகராறை தடுத்து பாஸ்கரனை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாலனை கைது செய்தனர்.