மதுரை, பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(24). கூலித்தொழிலாளி, இவரது வீட்டிற்கு செல்லும் பாதையில் தனிநபர் இடத்தில் இருந்த கோயில் நீதிமன்ற உத்தரவில் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. கடந்த 23ம் தேதி இப்பகுதியில் கோயில் திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது டூவீலரில் நண்பருடன் வந்த சதீஷ்குமாரை அவ்வழியாகச் செல்ல அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில், சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீசார், கோயில் நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, கோயில் விழாவிற்கு எதிராக பேசியதோடு, பெண்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.