ராசிபுரம், மே 25: நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அம்மன் கோயில் பகுதியில் பொன்னேரி பகுதியை சேர்ந்த பலர் குலதெய்வம் வழிபாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு குலதெய்வ வழிபாடு அத்தனூர் அம்மன் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று மாலை உறவினர்களுக்கு சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக அடுப்பின் காஸ் செல்லும் டியூபில் தீ பிடித்துள்ளது. சற்று நேரத்தில் மள மளவென எரிய தொடங்கியது. இதனால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிலிண்டரில் காஸ் தீர்ந்த காரணத்தால் தானாக தீ அணைந்தது. சிறு காயமின்றி அனைவரும் உயிர் தப்பினர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
கோயில் வழிபாட்டிற்கு சமையல் செய்த போது தீப்பிடித்த சிலிண்டர்
0